Loading Posts...

கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான் !!

கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்தார் ரசீன் கான்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனும், வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளருமான ரசீத் கான், கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் ஒன்றை படைத்துள்ளார்.

2019-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சில் நடைபெற உள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது.

இதில் எஞ்சியிருக்கும் இரண்டு இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் அயர்லாந்து, விண்டீஸ், ஆஃப்கானிஸ்தான், நேபாள் உள்ளிட்ட  அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மூலம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் விண்டீஸ் அணிகள் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,  ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய விண்டீஸ் அணி 204 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹோப்ஸை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கிய ஆஃப்கானிஸ்தான் அணி சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார்.

இது மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதி விரைவில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலிலும் ரசீத் கான் முதலிடத்தை ரசீத் கான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த தன் வசம் வைத்திருந்த இந்த சாதனையை தற்போது ரசீத் கான் முறியடித்துள்ளார்.

குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்;

ரசீத் கான் – 44 போட்டிகள்

ஸ்டார்க்  – 52 போட்டிகள்

சாக்லின் முஸ்தான் – 53 போட்டிகள்

பாண்ட் – 54 போட்டிகள்

பிரட் லீ – 55 போட்டிகள்

டிரெண்ட் பவுல்ட் – 56 போட்டிகள்

வக்கார் யூனிஸ் – 58 போட்டிகள்

இர்பான் பதான் – 59 போட்டிகள்

மோர்னே மோர்கல் – 59 போட்டிகள்

mujahith

......?

Leave a Comment

Loading Posts...