Loading Posts...

இப்ப வந்து பேசுங்கடா பாப்போம்; கடுப்பான ரவி சாஸ்திரி !!

இப்ப வந்து பேசுங்கடா பாப்போம்; கடுப்பான ரவி சாஸ்திரி 

 தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணியை விமர்சித்தவர்கள் எல்லாம் எங்கே ஓடி ஒளிந்துள்ளீர்கள் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டமாக பேசியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற கோலி தலைமையிலான இளம் இந்திய அணி, சுமார் 25 ஆண்டுகால இந்தியர்களின் கனவை நினைவாக்கியது. தற்போது இந்திய அணி, இலங்கை, வங்கதேச அணிகளுடனான முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

Indian batsman Shikhar Dhawan in action during the 1st T20I cricket match against South Africa in Johannesburg, South Africa, Saturday Feb. 18, 2018. (AP Photo/Christiaan Kotze)

இந்நிலையில் இந்திய அணியின் தோல்வியின் போது விமர்சித்த விமர்சகர்களை கடுமையாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,’ இந்திய விமர்சகர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இதுதான். தோல்வியை தோல்வி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நம்ம விமர்சகர்கள் அணி தேர்வு சரியில்லை. அணி சிறந்த அணியில்லை என்கின்றனர். அதற்கு என்னிடம் பதில் இல்லை. தற்போது அந்த புத்திசாலி விமர்சகர்கள் எங்கே.’ என்றார்.

Suresh Raina of India during the 2nd T20i between South Africa and India held at SuperSport Park in Centurion on the 21st Feb 2018
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில்  இழந்த இந்திய அணி, அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...