Loading Posts...

பெங்களூர் அணியில் இணைகிறார் அதிரடி வீரர் கோரி ஆண்டர்ஸன் !!

பெங்களூர் அணியில் இணைகிறார் அதிரடி வீரர் கோரி ஆண்டர்ஸன்

கவுல்டர் நைல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கோரி ஆண்டர்சனை பெங்களூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்காக சமீபத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில், பெங்களூர் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட கவுட்டர் நைல், சமீபத்தில் காயமடைந்தார். காயத்தில்  இருந்து கவுட்டர் நைல் இன்னும் பூரண குணமடையாததால் அவர் இந்த தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான கோரி ஆண்டர்ஸன் பெங்களூர் அணியில் இணைய உள்ளதாக பெங்களூர் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல் 2018ம் ஆண்டிற்கான ஏலத்தில் விலை போகாத கோரி ஆண்டர்சனை தற்போது பெங்களூர் அணி அவரது அடிப்படை விலையான 2 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில்  எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான கோரி ஆண்டர்சன், இதற்கு முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு விளையாடியுள்ளார். இதுவரை ஐ.பி.எல் தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள கோரி ஆண்டர்சன் 521 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...