Loading Posts...

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா !!

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா

முத்தரப்பு டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம்  ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஓய்வே இல்லாமல் தொடர்சியாக விளையாடி வரும் கோஹ்லி, பும்ராஹ், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட சில வீரர்களுக்கு ஓய்வு வழங்க பி.சி.சி.ஐ., திட்டமிள்ளதாக தெரிகிறது.

இதனால் முத்தரப்பு டி.20 தொடரை கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளதாக பிசிசிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர இந்த தொடரில் தோனிக்கும் ஓய்வுக்கு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் தெரிகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...