Loading Posts...

பிரச்சனையில் இருந்து தப்பியதால் சமி பெறப்போகும் தொகை 6 கோடி!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் மனைவி ஹசின் ஜகான் ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பேரில் விசாணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினை புகாருடன் கிரிக்கெட் போட்டி பிக்சிங்கிலும் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டார்.

இதனால் பிசிசிஐ மொகமது ஷமியின் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அத்துடன் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் நீரஜ் குமார் விசாரணை நடத்த வேண்டும் என்று சிஓஏ தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டார்.

விசாரணை நடத்திய நீரஜ் குமார் அறிக்கையை சிஓஏ-யிடம் சமர்பித்தது. அப்போது ஷமி பிக்சிங்சில் ஈடுபடவில்லை என்றும், இதுகுறித்து இனிமேல் விசாரிக்க வேண்டியதில்லை என்றும் சிஓஏ முடிவு செய்துள்ளது. இதனால் பிசிசிஐ ‘பி’ கிரேடில் மொகமது ஷமியை சேர்த்துள்ளது. இதனால் ஷமிக்கு 3 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும், டெல்லி அணி 3 கோய்க்கு இவரை எடுத்துள்ளது. இதனால் மொத்தம் இவருகு 6 கோடி ரூபாய்கள் கிடைக்கும்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்தார்.Mohammed Shami

அதோடு அவர் நிறுத்திவிடவில்லை. ‘எனக்கு உண்மையாக இல்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. பாகிஸ்தானை சேர்ந்த அலிஷாப் என்ற பெண்ணிடம் பணம் வாங்கியுள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் முகமது பாயின் வலியுறுத்தலின் பேரில் அதைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்த சர்ச்சையால் இந்தாண்டுக்கான பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்ததில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இது தாற்காலிக முடிவு தான் என பிசிசிஐ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.  முகமது ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டாரா என்பது குறித்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது. 

இந்நிலையில், முகமது ஷமி மீதான ஸ்பார்ட் பிக்ஸிங் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்துள்ளது. மேலும், கிரேட் ‘பி’-யில் விளையாடவும் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. இதனால் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் ஷமி விளையாடுகிறார்.

ஷமி மீதான கிரிக்கெட் ஸ்பார்ட் பிக்ஸிங் புகார் முடிவுக்கு வந்துவிட்டாலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி அளித்த புகார் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...