Loading Posts...

கொலோம்போவில் உள்ள ரசிகர் வீட்டுக்கு சென்று சத்தியத்தை நிறைவேற்றிய ரோகித் சர்மா

Cricket, Rohit Sharma, Sri Lanka

கொலோம்போவில் உள்ள தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று சத்தியத்தை நிறைவேற்றினார் இந்திய அணியின் நட்சத்திர தொடக்கவீரர் ரோகித் சர்மா. அது வேறு யாருமில்லை, கடந்த டிசம்பர் மாதம் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று ரோகித் சர்மா கொடுத்த விமான டிக்கெட்டை வைத்து இலங்கைக்கு சென்ற முகமது நிலம் தான்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணி இந்தியாவிற்கு வந்த போது இலங்கை அணிக்கு சப்போர்ட் செய்ய இலங்கை ரசிகர் முகமது நிலம் வந்திருந்தார். இந்தியாவில் இருந்த போது அவரது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று செய்தி வந்தது. அதன் பிறகு பணம் இல்லாமல் தவித்த நிலமுக்கு, விமான டிக்கெட் எடுத்து கொடுத்து உதவி செய்தார் ரோகித் சர்மா. மேலும், நான் இலங்கைக்கு வந்தால் அவர் வீட்டிற்கு சென்று அவரது தந்தையை காண வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 16) அந்த சத்தியத்தை நிறைவு செய்தார் இந்திய அணியின் ரோகித் சர்மா.

“எனக்கு பல வருடமாக முகமது நிலமை தெரியும். எனக்காக பல முறை சப்போர்ட் செய்துள்ளார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும், அவர் அழுதது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது,” என ரோகித் சர்மா தெரிவித்தார்.

“நாங்கள் இந்த நிலையில் இருக்க இவர்கள் தான் காரணம். நமது கடினமான நேரத்திலும் நமக்காக கூட இருப்பார்கள். நான் இலங்கைக்கு வந்தால் உன் தந்தையை வந்து சந்திக்கிறேன் என அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் கூறியிருந்தேன். இன்று அவர்கள் என்ன பார்த்தது சந்தோசமாக இருக்கிறது,” என ரோகித் சர்மா மேலும் கூறினார்.

Image result for mohamed nilam sri lanka

தன்னுடைய கஷ்ட காலத்தில் ரோகித் சர்மா எப்படி உதவி செய்தார் எனவும் முகமது நிலம் கூறியிருந்தார்.

“ரோகித் சர்மா ஒரு நல்ல மனிதர். என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என என் குடும்பத்திடம் இருந்து தகவல் வந்த நாள் எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது. உண்மையாகவே அப்போது என்னிடம் பணம் இல்லை மற்றும் இந்தியாவில் யாரும் எனக்கு தெரியாது. கடைசி நேர விமான டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும், இதனால் சுதிர் கவுதம் (சச்சின் டெண்டுல்கர் ரசிகர்) மூலம் ரோகித் ஷர்மாவிற்கு இது தெரிய வந்தது. அதன் பிறகு அவர் என்னை ஓட்டலுக்கு வரவழைத்து டிக்கெட் மற்றும் பணத்தை கொடுத்தார். இன்றைய நாளில் இது போல் யார் செய்வார்?,” என முகமது நிலம் கூறினார்.

Cricket, Wasim Akram, Rohit Sharma, BCCI, Shikhar Dhawan

India batsman Rohit Sharma hits a four on a ball delivered by South Africa bowler Kagiso Rabada during the fifth One Day International cricket match between South Africa and India at St. George Park in Port Elizabeth on February 13, 2018. / AFP PHOTO / MARCO LONGARI (Photo credit should read MARCO LONGARI/AFP/Getty Images)

“இந்திய அணியில் ரோகித் சர்மா மட்டும் அல்ல, எனக்கு அனைவரையும் தெரியும். ஆனால் எனக்கு மற்றவர்களை விட ரோகித் ஷர்மாவை அதிகமாக பிடிக்கும் மற்றவர்களுக்கும் தெரியும். சச்சின் டெண்டுல்கருக்கு சுதிர் என்றால், ரோகித் ஷர்மாவுக்கு நான்,” என அவர் நிலம் மேலும் தெரிவித்தார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...