Loading Posts...

வீடியோ; கோல்டன் டக்கான ரோஹித் சர்மா… கடுப்பில் ரசிகர்கள் !!

வீடியோ; கோல்டன் டக்கான ரோஹித் சர்மா… கடுப்பில் ரசிகர்கள்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா, கோல்டன் டக் அவுட்டாகி பெரும் அதிர்ச்சியளித்தார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அனி 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

இதனையடுத்து இரு அணிகள் இடையேயான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரி முதல் போட்டியில் வெற்றி பெற்று டி.20 தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் துவங்கிய நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டுமினி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், தவானும் துவக்கம் கொடுத்தனர்.

போட்டியின் முதல் ஓவரை எதிர்கொண்ட தவான் அந்த ஓவரில் ரன் எதுவும் அடிக்காததால் அந்த ஓவர் மெய்டன் ஓவர் ஆனாது.

இதனையடுத்து ஜூனிய டாலா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா,  தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் கோல்டன் டக்காகி வெளியேறினார்.

வீடியோ;

இதற்கு முன்னதாக சர்வதேச டி.20 போட்டியில் கோல்டன் டக்கான இந்திய துவக்க வீரர்கள்;

முரளி விஜய் v  தென் ஆப்ரிக்கா – 2010

ரஹானே v  பாகிஸ்தான் – 2016

கே.எல் ராகுல் v ஜிம்பாப்வே – 2016

ரோஹித் சர்மா v தென் ஆப்ரிக்கா – 2018

mujahith

......?

Leave a Comment

Loading Posts...