Loading Posts...

வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.?

வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாகிறார் ரோஹித் சர்மா.?

ஜூன் மாதம் நடைபெற உள்ள ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஐசிசி கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு, கோஹ்லி  இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட திட்டமிட்டுள்ளதால் அவர், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.

ஜூன் மாதம் 14 ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பி.சி.சி.ஐ., ஆலோசித்து  வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தொடருக்கான கேப்டன்கள் ரேசில் ரோஹித் சர்மா முந்துவதாகவும் பி.சி.சி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோஹ்லி கவுண்டி கிரிக்கெட்;

கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அந்த தொடர் விராட் கோலிக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது. டெஸ்ட் தொடர் முழுவதிலும் ஒரு அரைசதம் கூட விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. இதனால், விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விராட் கோலி மிகவும் திணறினார். குறிப்பாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்வதில் அவர் மிகவும் சிரமம் கொண்டார். ஆகவே, வரும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்படவும் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...