Loading Posts...

இதுவும் என் மனைவிக்காக தான்… சதத்தை காதலர் தின பரிசாக்கிய ரோஹித் சர்மா !!

இதுவும் என் மனைவிக்காக தான்… சதத்தை காதலர் தின பரிசாக்கிய ரோஹித் சர்மா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பெற்ற ஆட்ட நாயகன் விருதை ரோஹித் சர்மா தனது மனைவிக்கு காதலர் தின பரிசாக அர்பணித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றியும், தென் ஆப்ரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்ற நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்ச் செய்த இந்திய அணிக்கு ரோஹித்ச் சர்மா சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தென் ஆப்ரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி கைப்பற்றியுள்ள முதல் தொடர் இதுவாகும்.

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா, அதனை  தனது மனைவிக்கு காதலர் தின பரிசாக அர்பணித்துள்ளார்.

Happy Valentine’s Day Rits ❤ @ritssajdeh

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on Feb 13, 2018 at 5:48pm PST

ஆட்டநாயகன் விருதை கையில் பிடித்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரோஹித் அதில், தனது மனைவிக்கு காதலர் தின வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான தொடரில் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து, அதனை தனது மனைவிக்கு திருமண நாள் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...