Loading Posts...

தல தோனி எப்பவும் சிறந்த விக்கெட் கீப்பர் ; சந்தீப் பட்டீல் !!

தல தோனி எப்பவும் சிறந்த விக்கெட் கீப்பர் ; சந்தீப் பட்டீல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியே சிறந்த விக்கெட் கீப்பர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை இடையேயான முத்தரப்பு டி.20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தொடரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வங்கதேச அணியுடனான இறுதி போட்டியில் போட்டியின் தலையெழுத்தை வெறும் 8 பந்துகளில் மாற்றிய தினேஷ் கார்த்திக், கடைசி ஒரு பந்திற்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி ஆட்டத்திற்கு பிறகு, தோனியால் தான் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார் என்றும், தோனியை விட தினேஷ் கார்த்திக்கே சிறந்த விக்கெட் கீப்பர் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர், முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினருமான சந்தீப் பட்டீல், தோனியே சிறந்த விக்கெட் கீப்பர் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சந்தீப் பட்டீல் கூறியதாவது, வங்கதேச அணியுடனான இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டம் அபரமானது. அவர் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் என்னை பொறுத்தவரையில் தோனி தான் சிறந்த விக்கெட் கீப்பர்.

தோனியின் அனுபவமும், ஆற்றலும் இந்திய அணிக்கு 2011 உலகக்கோப்பை உள்பட பல போட்டிகளில் கை கொடுத்துள்ளது. இக்கட்டான தருணத்தில் தோனியை போல் விளையாடுபவர்கள் யாரும் இல்லை. 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்  வரை தோனி விளையாட வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Mumbai: BCCI Secretary, Ajay Shirke and Selection Committee Chairman, Sandeep Patil during a press conference following the All-India senior selection committee meeting for the upcoming Test Series. PTI Photo by Mitesh Bhuvad(PTI9_12_2016_000077B)

ஆனால், இதே சந்தீப் பட்டேலே கடந்த 2004ம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் போது தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுக்க பரிந்துரைத்தவர் என்பது வரலாறு.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...