Loading Posts...

இந்திய வீரர்கள் பாகிஸ்தானிற்கு வர வேண்டும்; ஷாஹித் அப்ரிடி வேண்டுகோள் !!

இந்திய வீரர்கள் பாகிஸ்தானிற்கு வர வேண்டும்; ஷாஹித் அப்ரிடி வேண்டுகோள்

அடுத்த வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்திய வீரர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இதனை அப்படியே காப்பியடித்து அஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பிக்பேஸ் லீக் என்ற பெயரிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரிலும் ஆண்டுதோறும் கிரிக்கெட் தொடர்கள் நடத்தி வருகின்றன.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் மூன்றாவது சீசன்  தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்று விளையாடிது இல்லை, அதே போல் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கூட இந்த தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான போட்டிகள் ஆளே இல்லாத மைதானத்தில் தான் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஆண்டாவது இந்த தொடரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் இதற்கான முயற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்ரிடி கூறியதாவது, இதுவரை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்காத வீரர்கள் அனைவருக்கும் அடுத்த வருட தொடருக்கு அழைப்பு கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் போதிய பாதுகாப்பு இல்லாத நாடு என்று கருதி பாகிஸ்தானிற்கு வராமல் இருக்கும் வீரர்களிடம் உண்மையை எடுத்துரைத்து அவர்கள் அடுத்த தொடரில் கலந்து கொள்ள வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...