Loading Posts...

முத்தரப்பு தொடரில் இருந்து விலகுகிறார் வங்கதேச அணியின் கேப்டன்..?

முத்தரப்பு தொடரில் இருந்து விலகுகிறார் வங்கதேச அணியின் கேப்டன்..?

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனான ஷாகிப் அல் ஹசன், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் முத்தரப்பு தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம்  ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்காக வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், கடந்த சில தினங்களுக்கு முன்பே விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்தார்.

Bangladesh cricketer Shakib Al Hasan plays a shot during the fifth one day international (ODI) cricket match in the Tri-Nations Series between Sri Lanka and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on January 23, 2018. / AFP PHOTO / –

காயத்தில் இருந்து பூரண குணமடைந்து விட்டதை  போல் ஷாகிப் உணர்ந்து உடற்தகுதி தேர்வில் தேர்சியடைந்தாலும், அவருக்கு இன்னும் சில வாரங்கள் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர், இதனால் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள ஷாகிப் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இது குறித்து ஆலோசனை கேட்ட தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

ஷாகிப்பை பரிசோதித்த இரண்டு மருத்துவர்களும் ஷாகிப்பிற்கு இன்னும் சில வாரங்கள் ஓய்வு தேவை என்பதேயே அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் குழப்படைந்துள்ளது.

இது குறித்து ஷாகிப் நாடு திரும்பிய பிறகு அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...