Loading Posts...

நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு நாங்களே காரணம் ; புலம்பும் தென் ஆப்ரிக்கா கோச் !!

நாங்கள் பட்ட அசிங்கத்திற்கு நாங்களே காரணம் ; புலம்பும் தென் ஆப்ரிக்கா கோச்

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை இழந்ததற்கு எங்கள் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் கிப்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றியும், தென் ஆப்ரிக்கா அணி ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்ற நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்ச் செய்த இந்திய அணிக்கு ரோஹித்ச் சர்மா சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் வழக்கம் போல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தென் ஆப்ரிக்கா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி கைப்பற்றியுள்ள முதல் தொடர் இதுவாகும்.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளர் கிப்சன் “இந்த தோல்விக்கு எங்கள் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங்கே காரணம். ஐந்தாவது போட்டிக்கு முன்தாக தொடரை சமன் செய்வதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் இப்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை. அதிலும் இந்திய அணி 280 ரன்களுக்குள் சுருட்டியதால் வெற்றி நிச்சயம் என நம்பினோம், ஆனால் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்த தோல்விக்கு காரணம்.

என்னதான் தவறு எங்கள் மேல் இருந்தாலும், இந்திய அணி நிச்சயம் இந்த வெற்றிக்கு தகுதி வாய்ந்த அணி, இந்திய அணியின் டாப் அர்டர் பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...