Loading Posts...

அட்டூழியம் செய்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆப்பு வைத்தது ஐ.சி.சி., !!

அட்டூழியம் செய்த ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆப்பு வைத்தது ஐ.சி.சி.,

தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது போட்டியில்  பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமிரான் மீது ஐ.சி.சி., ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியது.

கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர்.

 

இந்நிலையில் இது குறித்து விசாரணை  செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமிரான் பென்கிராப்ட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸி கேப்டன் ஸ்மித்திற்கு போட்டி சம்பளம் முழுவதும் அபராதமாகவும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பந்தை சேதப்படுத்திய முக்கிய குற்றவாளியான பேன்கிராஃப்ட்டுக்கு போட்டி சம்பளத்தில் 75% அபராதமும், 3 ஐசிசி அபராத புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...