Loading Posts...

ஒழுங்கீனமான செயலுக்கு பொறுப்பேற்று தனது கேப்டன் பதவியை துறந்தார் ஸ்டீவ் ஸ்மித் !!

ஒழுங்கீனமான செயலுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்தார் ஸ்டீவ் ஸ்மித்

பந்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களுக்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும், துணை கேப்டன் டேவிட் வார்னரும்  தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகள் இடையேயான இந்த தொடர் துவக்கத்தில் இருந்தே டி.காக் – டேவிட் வார்னர் சண்டை, ராபாடாவின் வார்த்தை போர் என சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது.

டி.காக், வார்னர் மற்றும் ரபாடாவின் பிரச்சனையை ஐ.சி.சி., கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தீர்த்து வைத்த நிலையில், நேற்று ஆஸ்திரேலிய வீரரால் புதிய சர்ச்சை கிளம்பியது.

கேப்டவுனில் தற்போது நடைபெற்று வரும் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான கேமிரான் பென்கிராப்ட் மர்ம பொருள் ஒன்றை வைத்து பந்தை சேதப்படுத்தியுள்ளார்.

பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் இந்த குற்றத்திற்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து தானாக விலக வேண்டும் என்று கருத்து வலுத்து வருகிறது.

இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ் கேட்பதற்கு டிரெசிங் ரூமை பார்த்தது, எதிரணி வீரர்களுடன் தேவையே இல்லாமல் சண்டை போடுவது என தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் ஸ்டீவ் ஸ்மித் இனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்க கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்குள்ளே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் கடும் எதிர்பின் எதிரொலியாக, ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன் பதவியையும், டேவிட் வார்னர் தனது துணை கேப்டன் பதவியையும் இன்று ராஜினாமா செய்துள்ளனர்.

தென் ஆப்ரிக்கா அணியுடன் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் டிம் பெய்ன் கேப்டனாக செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...