Loading Posts...

ஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஸ்மித், வார்னர் மீது வாழ்நாள் தடை.. ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீது வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் கேமருன் பேன்கிராஃப்ட், மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பேன்கிராப்ஃட் தனது தவறை ஒப்புக்கொண்டார். அணியில் உள்ள முக்கிய வீரர்கள் சிலர் திட்டமிட்டே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். இந்த தவறு தமக்கு தெரிந்தே நடந்ததாகக் கூறிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இனி தமது தலைமையில் இதுபோன்ற சம்பவம் தொடராது எனக் கூறினார்.

இவ்விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். சிலர் கேப்டன் ஸ்மித் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல் பந்தை சேதப்படுத்திய விவகாரம், ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனையடுத்து கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். புதிய பொறுப்பு கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் போட்டிக் கட்டணத்தில் 100% அபராதத்தையும் ஐசிசி விதித்துள்ளது. இதேபோல் பேன்கிராப்ஃட்க்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதித்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து பல ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் ஸ்மித் மற்றும் அவருக்கு துணை போகும் வார்னர் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமே முடிவு செய்துவிட்டதாகவும் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இரண்டு நட்சத்திர வீரர்களும் வாழ்நாள் தடை செய்யப்படுகிறார்கள் என்றே செய்தியே ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...