Loading Posts...

முகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து !!

முகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து

கார் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள முகமது ஷமி விரைவில் குணமடைய ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி கடந்த சில தினங்களாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது என்று அரம்பித்த ஷமியின் மனைவி ஹசீன் ஜஹான் ஷமியை தீவிரவாதிகள் வரை தொடர்ப்பு படுத்தி குற்றம் சாட்டினார்.

Indian cricketer Mohammed Shami leaves after batting in the nets during a training camp at National Cricket Academy in Bangalore, India, Friday, July 1, 2016. The Indian team is scheduled to travel to West Indies to play four match test series starting July 21. (AP Photo/Aijaz Rahi)

ஹசீன் ஜஹான் வைத்த பிரதானமான குற்றச்சாட்டுகளுள் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்திலும் ஈடுபட்டார் என்பது ஆகும். இது குறித்து பி.சி.சி.ஐ.,யும் ஊழல் தடுப்பு போலீஸாரும் நடத்திய விசாரணையின் முடிவில் ஷமி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் பிறகு ஷமியை இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இணைத்தது.

இந்த பிரச்சனையில் இருந்து ஷமி விடுபட்டு இரண்டு தினங்கள் கூட ஆகாத நிலையில், ஷமி நேற்று டெஹ்ராடூனில் இருந்து டெல்லி திரும்பியபோது அவரது கார் விபத்துக்குள்ளானது.

அங்கிருந்தவர்கள் ஷமியை மருத்துவமனையில் டெஹ்ராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஷமிக்கு அங்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளது.

சிறிய காயம் என்பதால் ஷமி அடுத்த இரு தினங்களுக்குள் ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி அணியில் இணைவார் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் முகமது ஷமி விரைவில் குணமடைய இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இவர் சமீப காலமாக நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டார், விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...