Loading Posts...

புதிய சாதனை படைத்தார் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் !!

புதிய சாதனை படைத்தார் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர்

தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் பர்ஸ்ட் டிவிஷன் எலைட் லீக் கிரிக்கெட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பர்ஸ்ட் டிவிஷன் எலைட் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. இதில் குளோப் ட்ரோட்டர்ஸ் – இந்தியா பிஸ்டோன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. குளோப் ட்ரோட்டர்ஸ் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார்.

முதலில் விளையாடிய பேட்டிங் செய்த குளோப் ட்ரோட்டர்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா பிஸ்டோன்ஸ் வாஷிங்டன் சுந்தரின் சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 178 ரன்னில் ஆல் அவுட்டானது. சுந்தர் 39 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்தார்.

2வது இன்னிங்ஸில் குளோப் ட்ரோட்டர்ஸ் 3 விக்கெட்டுக்கு 72 ரன் எடுத்து விளையாடி வருகின்றது.

மற்றொரு அரையிறுதியில் ஆழ்வார்பேட்டை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்வாப்னில் குகலே 211 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் விளையாட தொடங்கிய ஜாலி ரோவர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது

mujahith

......?

Leave a Comment

Loading Posts...