Loading Posts...

தென் ஆப்ரிக்காவை சிதறடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோஹ்லி !!

தென் ஆப்ரிக்காவை சிதறடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோஹ்லி

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நடப்பு தொடர் மூலம் இந்திய கேப்டன் கோஹ்லி புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றது.

இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் 4 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில்  இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி வரும் இந்திய அணிக்கு வழக்கம் போல் கேப்டன் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன்  குவித்து வருகிறார்.

இதன் மூலம் தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு ஒருநாள்  தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள கோஹ்லி, ஒரே ஒருநாள்  தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இதே போல் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த டாப் – 5 வீரர்கள் பட்டியல்;

கிறிஸ் கெய்ல்;

சிக்ஸர் கிங்கான விண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒரே தொடரில் 455 ரன்கள் குவித்துள்ளார்.

Page 1 of 5

mujahith

......?

Leave a Comment

Loading Posts...