Loading Posts...

சிறுவனுடன் கொஞ்சி விளையாடும் தல தோனி; வைரல் வீடியோ !!

சிறுவனுடன் கொஞ்சி விளையாடும் தல தோனி; வைரல வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, சிறுவன் ஒருவனை ஏமாற்றி விளையாடும் வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 சீசன் நடைபெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல்.,லின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் பரம எதிரியான சம பலம் கொண்ட இரு அணிகளான மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இரண்டு வருட தடை காலம் முடிந்து, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

பயிற்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த சென்னை வீரர்களும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பயிற்சியின் போது அங்கிருந்த சிறுவன் ஒருவனுடன் தோனி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...