Loading Posts...

அவர் ஒரு வித்தியாச தரம் கொண்ட பேட்ஸ்மேன்

இலங்கைக்கு எதிரான தொடரை டக் அவுட் உடன் தொடங்கிய கேப்டன் விராட் கோலி தொடர் நாயகன் விருதினை பெற்றுள்ளார்.

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த நவம்பர் 11-ம் தேதி தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் விராட் கோலி டக் அவுட் ஆனார். இரண்டாது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 104 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli 6th Test Double Century

இதனையடுத்து, நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதில் கேப்டன் விராட் கோலி 213 ரன்கள் குவித்தார். டெல்லியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியும் டிராவில் முடிந்தது. கோலி முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 243 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்சிலும் 50 ரன்கள் எடுத்தார்.

Virat Kohli punches in the air after getting to his double-hundred, India v Sri Lanka, 3rd Test, Delhi, 2nd day, December 3, 2017

இந்தப் போட்டியில் 243 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், தொடரில் 5 இன்னிங்சில் மட்டும் விளையாடி 610 ரன்கள் குவித்த கோலி தொடர் நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் சதம் அடித்தார். பேட்டிங் சராசரி 152 ஆகும். இந்த ஆண்டில் மட்டும் 46 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 2818 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மட்டும் விராட் கோலி மொத்தம் 2818 ரன் குவித்துள்ளார். இதற்க்கு முன்னர் 2014ல் இலங்கையின் குமார சங்கக்காரா 2868 ரன் குவித்துள்ளார். அதே போல், 2005ல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2833 ரன் குவித்துள்ளார். இதனால், இருவரது சாதனையும் தற்போது சேப் என ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.

(Photo Source: Getty Images)

அதற்கு பதில் அளித்த குமார சங்கக்காரா, விராட் கோலி பேட்டிங் செய்யும் வரை இந்த சாதனை அப்படியே இருக்காது, அடுத்த வருடமே இந்த சாதனையை முறியடிப்பார், அதற்க அடுத்த வருடமும் செய்வார். அவர் ஒரு வித்தியாசமான தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஆவார்.

 

என ட்வீட் செய்திருந்தார் சங்கக்காரா.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...