Loading Posts...

மூன்று தொடரில் 600 ரன், கேப்டனாக விராட் சாதனை

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி தனது அசுரத்தனமான பார்மினால் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 2600+ ரன் குவித்துள்ளார்.

இப்படியாக எளிதாக பல சாதனைகளை படைத்து வருகிறார் விராட்.

 

கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. அந்த தொடரில் முதல் முதலாக 600+ ரன் ஒரு தொடரில் மட்டுமே குவித்தார்.

 

அதன் பின்னர், ஓவ்வொரு டெஸ்ட் தொடரிலும் எப்படியாவது ஒரு இரட்டை சதத்தை விளாசி விடுவார். இப்படியாக மொத்தம் 6 இரட்டை சதங்களை விளாசிவிட்டார் கோலி. அதன், பின்னர் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது அந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 600+ ரன்கள் குவித்து சாதனை படித்தார்.

 

அடுத்து வந்த 3 போட்டிக்காக கொண்ட இலங்கை தொடரில் கேப்டனாக 3 போட்டியையும் வென்று சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தார்.  மேலும், இலங்கை மண்ணில் நடந்த டேட் தொடரை முற்றிலுமாக துடைத்தெடுத்த முதல் கேப்டன் என்ற வரலாற்று சாதனையும் படைத்துள்ளார் விராட் கோலி.

 

அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இந்த தொடரிலும் விராட் கோலி தனது அசுரத்தனமான பேட்டிங்கை காட்டியுள்ளார். இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டும், 5 ஆட்டத்தில் 610 ரன் குவித்துள்ளார். இதன் சராசரி 152.50 ஆகும். இதில் மொத்தம் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள், ஒரு சதம், ஒரு அரை சதம் ஆகியவை அடங்கும்.

 

இந்த பேட்டிங் சாதனைகள் இத்தனையும் தாண்டி, கேப்டனாகவும் இந்திய அணிக்கு வரலாற்று பெருமை சேர்க்கவுள்ளார் விராட். இதுவரை மொத்தம் அடுத்தடுத்து 8 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி. தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் கிட்டத்தட்ட இந்திய அணியின் கையில் வெற்றியாக வந்துகொண்டிருக்கிறது. இந்த தொடரிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து 9 தொடர்களில் வென்ற இரண்டாவது அணியாக இந்தியா இடம் பிடிக்கும். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் 9 தொடர்களை வென்று வரலாற்றை எழுதியுள்ளது.

 

இப்படியாக அடுத்தடுத்து வரும் அணிகளை தன் பேட்டிங்காலும், ஆக்ரோஷமான கேப்டன்சிப்பாலும் துவம்சம் செய்து சாதனை படைத்து வருகிறார். மேலும், அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடருக்கு போதிய நேரம் இல்லை எனக் கூறியதால் அவருக்கு இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தொடர் முக்கியமான தொடர் என்பதால், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வருடம் முழுவதும் இந்தியா விளையாடிய அனைத்து தொடரிலும் தொடர்ந்து  விளையாடி வருபவர் விராட் கோலி மட்டுமே. மேலும், இலங்கை அணியுடனான டி20 தொடர் டிசம்பர் 24ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் டிசம்பர் 28ஆம் தேதியை தென்னாப்பிரிக்கா செல்கிறது. இந்திய அணி இதன் காரணமாக இலங்கை அணியுடனான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...