Loading Posts...

சென்னை  சேப்பாக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் தல தோனி… வீடியோ !!

சென்னை  சேப்பாக்கத்தில் மீண்டும் களமிறங்கினார் தல தோனி… வீடியோ

ஐ.பி.எல் 2018ம் ஆண்டு தொடருக்கான பயிற்சியில் தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்  தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரின் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி  துவங்க உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில்  சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டு தற்போது மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக தோனி, ஹர்பஜன் சிங், பிராவோ உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்தனர். ஒவ்வொரு வீரருக்கும் மாலை அணிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வரவேற்பு அளித்தது.

இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி உள்பட அனைத்து வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களும், புகைப்படங்களும் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

இதில் வலைபயிற்சியில் தோனி ஈடுபட்டிருக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

mujahith

......?

Leave a Comment

Loading Posts...