Loading Posts...

விரைவில் குறைகிறது தோனியின் தரமதிப்பீடு… காரணம் என்ன..?

Cricket, India, Ms Dhoni, BCCI, BCCI Contract List

விரைவில் குறைகிறது தோனியின் தரமதிப்பீடு… காரணம் என்ன..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியை, வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலில் ஏ பிரிவில் இருந்து B பிரிவிற்கு மாற்றுவதற்கு குறித்து பி.சி.சி.ஐ., ஆலோசித்து வருகிறது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு நடைப்பெற்ற டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ரக போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு பெரும்பாலான போட்டிகளில் வென்று அசத்தியது. இதன் மூலம் இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது.

இந்திய அணி மூலம் பி.சி.சி.ஐ., நல்ல வருவாய் கிடைத்து வந்தாலும்  கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்காமல் இருந்தது.

வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி, டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வருகிற 3-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. அதற்கு முன்பு இந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு இருக்கும்.

ஏ, பி. மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்துதான் வீரர்களை தரம் பிரித்து உள்ளார்.

‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் நீடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. நேற்றைய கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அவரது கிரேடை குறைப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ராமசந்திர குஹா என்னும் முன்னாள் கிரிக்கெட் சங்க நிர்வாகி, தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் அவரை மட்டும் ஏன் இன்னும் B பிரிவிற்கு மாற்றவில்லை என்று சமீபத்தில் கேள்வியெழுப்பி அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...