Loading Posts...

அத பத்தி நம்ம இஷ்டத்துக்கு எதுவும் பேச கூடாது; சவுரவ் கங்குலி !!

அத பத்தி நம்ம இஷ்டத்துக்கு எதுவும் பேச கூடாது; சவுரவ் கங்குலி !!

முகமது ஷமி விவாகரத்தில், உண்மை தகவல்கள் வெளியாகும் வரையில் அது பற்றி கருத்து தெரிவிப்பது சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசீன் ஜஹான் கடந்த சில தினங்களாகவே கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிப்பதோடு நிறுத்திவிடாமல், ஷமி தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், தன்னை  ஏமாற்றி விட்டதாகவும் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் ஷமி பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்று கொண்டு சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் ஹசீன் ஜஹான் புகார் அளித்து, அதனை பி.சி.சி.ஐ.,க்கும் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழல் தடுப்பு போலீஸாரும் ஷமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷமி தவறு செய்திருக்க மாட்டார் என்று கபில் தேவ், தோனி போன்ற பலரும் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், ஷமி விவகாரம் குறித்தான முழுமையான தகவல் வெளியாகும் வரை இது குறித்து பேசுவது சரியானது அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கங்குலி கூறியதாவது, “ஷமி மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், இது தவிர ஊழல் தடுப்பு விசாரணை குழுவும் ஷமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஒரு பிரச்சனை குறித்து பேசுவது சரியானது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...