Loading Posts...

யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நிரந்தரமாக நீக்குகிறது பி.சி.சி.ஐ..?

Cricket, Yuvarj Singh, India, BCCI
யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நிரந்தரமாக நீக்குகிறது பி.சி.சி.ஐ..?

வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி மூலம் பி.சி.சி.ஐ., நல்ல வருவாய் கிடைத்து வந்தாலும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்காமல் இருந்தது.

வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி, டோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்கும் நிர்வாக குழுவிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன்படி வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வருகிற 3-ந் தேதி புறப்பட்டு செல்கிறது. அதற்கு முன்பு இந்திய வீரர்களுக்கான சம்பள உயர்வு இருக்கும்.

ஏ, பி. மற்றும் சி கிரேடு அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்துதான் வீரர்களை தரம் பிரித்து உள்ளார்.

Suresh Raina of India during the 2nd T20i between South Africa and India held at SuperSport Park in Centurion on the 21st Feb 2018
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS

‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த சீனியர் வீரரான டோனி ‘ஏ’ கிரேடில் நீடிப்பாரா? என்பது உறுதியாகவில்லை. நேற்றைய கூட்டத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அவரது கிரேடை குறைப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே போல் இந்த ஒப்பந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் பெயர் இடம்பெறாது என்று தற்போது பி.சி.சி.ஐ., வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட கடந்த 7 மாத காலமாக யுவராஜ் சிங் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடததால் அவர் பெயர் நிச்சயம் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதே போல் கருண் நாயர், அம்பத்தி ராயூடு, மந்தீப் சிங், ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்களின் பெயரும் இந்த வருடத்திற்கான ஒப்பந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...