Loading Posts...

முகமது ஷமி பிரச்னையை பற்றி பேச மறுத்த யுவராஜ் சிங்

Cricket, Yuvarj Singh, India, BCCI

முகமது ஷமியின் பிரச்சனை பற்றி பேச நான் விரும்பவில்லை, இதனால் அது அவரை தொந்தரவு செய்யாது என இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஹரியானாவில் உள்ள ஒரு கிரிக்கெட் அகாடெமியில் இருக்கிறார் யுவராஜ் சிங். கடந்த ஒரு வருடமாக இந்திய அணியில் இடம் பிடிக்க தவறி வரும் யுவராஜ் சிங், முகமது ஷமி மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான பிரச்சனையை பற்றி பேச விருப்பம் இல்லை என தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவர்களின் குடும்பத்தின் மேல் புகார் தெரிவித்து இருக்கிறார் முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவரது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்திருப்பதாகவும் ஷமியின் மனைவி அசின் தெரிவித்திருந்தார்.

Yuvraj Singh is Laureus ambassador from India. (Photo by Boris Streubel/Getty Images for Laureus)

சில வாரங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் வாரியம். முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளதால், அவரது பெயரை ஒப்பந்த பட்டியலில் சேர்க்காமல் நிறுத்தி வைத்து பிசிசிஐ. இதனால், பெறும் பிரச்சனையில் சிக்கியுள்ளார் முகமது ஷமி.

எனினும், தனது மனைவி கூறியது அனைத்தும் உண்மை இல்லை என மறுத்துவிட்டார் முகமது ஷமி. அதனை பற்றி முழு உண்மை தெரியும் வரை, நாம் அதை பற்றி பேச கூடாது.

PRETORIA, SOUTH AFRICA – JANUARY 13: Mohammed Shami of India during day 1 of the 2nd Sunfoil Test match between South Africa and India at SuperSport Park on January 13, 2018 in Pretoria, South Africa. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு நட்சத்திர வீரராக இருக்கும் முகமது ஷமி, ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெல்ல முக்கிய பங்கு வகித்தார் ஷமி. அவர் டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக இருப்பதால், பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் A அல்லது B கிரேடில் இருந்திருப்பார்.

Mohammed Shami

Mohammed Shami

அவரை பற்றி அவரது மனைவி புகார் அளித்த பிறகு தான், ஒப்பந்த பட்டியலில் இருந்து அவரின் பெயரை நீக்கியது இந்திய கிரிக்கெட் வாரியம். பிசிசிஐ இதை பற்றி விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், ஏன் அவரின் பெயரை நீக்கினார்கள் என யாருக்கும் தெரியவில்லை. ஆனால், மனம் தளராத முகமது ஷமி இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க நினைப்பார்.

Silambarasan

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...