Loading Posts...

மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் மாற்றம்

இந்தியாவின் பிரம்மாண்ட டி20 கிரிக்கெட் லீக்கான ஐ.பி.எல் தொடரின் 10 சீசன் முடிந்து தற்போது 11ஆவது சீசனுக்காக வேலைகள் மும்மூரமாக நடைபெற்று வருகின்றன. ஐ.பி.எல்-11 அடுத்து வருடம் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் மே மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக முதற்கட்ட ஆயத்த பணிகளில் நேற்று (டிச.06), வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான வரைவினை வெளியிட்டது ஐ.பி.எல் கமிட்டி. 

இதன்படி,

ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதே போல் ரீட்னசன் பாலிசி மூலம் அதிகமாக மூன்று வீரர்களும் மற்றும் ரைட் டு மேட்ச் கார்ட்ஸ் மூலம் அதிக பட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என தகவல் வந்துள்ளது.

அந்த தக்கவைத்து கொள்ளும் ஐந்து வீரர்கள் இந்த அடிப்படையில் தான் இருக்கவேண்டும்.

– அதிகபட்சமாக 3 சர்வதேச இந்திய வீரர்கள்
– அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள்
– அதிகபட்சமாக 2 சர்வதேச போட்டிகள் விளையாடாத வீரர்கள்

இந்த நிலையில், மும்பை அணியின் பீல்டிங் கோச்சாக இருந்த ஜாண்டி ரோட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் பாமமெண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் பாம்மெண்ட் , இங்கிலாந்தின் முதல் தரப் போட்டிகளில் ஆடிய வீரர் ஆவார். ஆனால், இங்கிலாந்து அணிக்காக ஆடியதில்லை. தற்போது நியூசிலாந்து நாட்டின் வடக்கு மாவட்ட அணியின் பயிற்சியாளராக உள்ள ஜேம்ஸ் பாம்மென்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2013-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் அவர்கள் சார்ந்த அணிகள் குற்றவாளிகள் என்று முத்கல் குழு கூறியிருந்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிப்பது குறித்து முடிவெடுக்க ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.6 மாத கால விசாரணைக்குப் பிறகு தனது தீர்ப்பை லோதா குழு 2015ம் வருடம் ஜூலை 14-ஆம் தேதி அளித்தது. அந்தத் தீர்ப்பில், விதிகளை மதிக்காமல் அணியின் தலைமை நிர்வாகிகளுக்கு (குருநாத், ராஜ் குந்த்ரா) உடந்தையாகச் செயல்பட்டதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அணிகளின் நிர்வாகிகள் குருநாத் மெய்யப்பன், குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கு வாழ்நாள் தடை விதிப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

Editor

The author didnt add any Information to his profile yet

Leave a Comment

Loading Posts...