Loading Posts...

முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!!

முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, வங்கதேசம்  ஆகிய 3 நாட்டு அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- வங்கதேச அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- வங்கதேச, 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-வங்கதேசம், 16 ஆம் தேதி இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியும் வங்கதேச அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இரு அணிகளும் தொடருக்கு தயாராகி வரும் நிலையில்,

இலங்கை அணி மட்டும் தனது அணியை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஒருவழியாக இலங்கை அணியும், முத்தரப்பு தொடருக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

இதில் காயம் காரணமாக இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் தொடரில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக தினேஷ் சண்டிமால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் டிக்வெல்லா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முத்தரப்பு தொடருக்கான இலங்கை அணி;அ

தினேஷ் சண்டிமால், உபுல் தரங்கா, தனுஷ்கா குணதிலகே, குஷால் மெண்டிஸ், தசுன் சனகா, குஷால் ஜனித் பெரேரா, திஷாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்கா லக்மல், இஷுரு உதானா, அகிலா தனன்ஜன்யா, அமிலா அபோன்ஸோ, நுவன் பிரதீப், துஸ்மந்த்ரா சமீரா, தனன்ஜன்யா டி சில்வா.

mujahith

......?

Leave a Comment

Loading Posts...